பாடல் 100
தாராளமாக உபசரிப்போம்
-
1. யெகோவா என்றும் தாராளமாகவே,
நம் தேவை ஒவ்வொன்றும் பூர்த்தி செய்கின்றார்.
மழை, வெயில் தந்தார், நம் ஸ்வாசமும் தந்தார்,
நாம் கேட்காமல் எல்லாமே தந்தார்,
யெகோவா போல் நாமும் அன்பு காட்டுவோம்,
அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் தேடுவோம்.
பூப்போன்ற வார்த்தையால் உற்சாகம் தந்து நாம்,
நெஞ்சார நேசிப்போம் எந்நாளும்.
-
2. அன்புள்ள லீதியாள் போல நாமுமே,
“வீட்டிற்கு வாருங்கள்” என்று சொல்வோமே.
தோற்றத்தை பார்க்காமல் நாம் பாசம் காட்டுவோம்.
யெகோவா தேவன் போல் நேசிப்போம்.
புண்ணான நெஞ்சத்தின் காயம் ஆற்றவே,
பொன்னான நேரம் தந்தாலே போதுமே.
தாராளமாக நாம் உபசரித்தாலே,
ஏராளமாகும் ஆனந்தமே.