இயேசுவுடைய பலியிலிருந்து நன்மை அடையுங்கள்
இயேசுவுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வருடா வருடம் உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளும் அவர்களோடு சேர்ந்து லட்சக்கணக்கான மக்களும் ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி வருகிறார்கள். அதுதான் இயேசுவுடைய மரண நினைவுநாள் நிகழ்ச்சி. (லூக்கா 22:19) இந்த நிகழ்ச்சி, மனிதர்களுக்காக இயேசு செய்த உயிர் தியாகம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அதற்கு நன்றி காட்டுவதற்கும் நமக்கு உதவி செய்கிறது. அதுமட்டுமல்ல, அவர் செய்த தியாகத்தால் இன்றைக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திலும் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது.—யோவான் 3:16.
இந்த வருஷம் நடந்த இயேசுவுடைய மரண நினைவுநாள் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டிருந்தாலும் சரி, கலந்துகொள்ளவில்லை என்றாலும் சரி, அவருடைய உயிர் தியாகத்தால் நீங்கள் எப்படி நன்மை அடையலாம்? நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்களை இயேசு சொல்லிக்கொடுத்தார்:
1. கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும். பரலோகத்தில் இருக்கிற தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்தபோது இயேசு இப்படிச் சொன்னார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.”—யோவான் 17:3.
2. கற்றுக்கொண்டபடி நடக்க வேண்டும். அவர் கற்றுக்கொடுத்தபடி நாம் நடக்க வேண்டும் என்பதை இயேசு திரும்ப திரும்பச் சொன்னார். உதாரணத்துக்கு, இயேசு அவருடைய பிரபலமான ஒரு சொற்பொழிவை முடிக்கும்போது, தன்னுடைய ‘வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செய்கிறவனை’ பாராட்டினார். (லூக்கா 6:46-48) அதுபோலவே, இன்னொரு சந்தர்ப்பத்திலும், “இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்” என்று சொன்னார்.—யோவான் 13:17.
கடவுளைப் பற்றியும் அவருடைய மகனான இயேசுவைப் பற்றியும் நீங்கள் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் கற்றுக்கொண்டபடி வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு உதவுகிற சில விஷயங்கள் இதோ:
பைபிள் படிப்புத் திட்டம்
எங்களுடைய இலவச பைபிள் படிப்புத் திட்டம், பைபிளை ஆழமாகப் படிப்பதற்கும் அதன்படி நடப்பதற்கும் நிறைய மக்களுக்கு உதவி செய்திருக்கிறது.
இந்த பைபிள் படிப்புத் திட்டத்தைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்வதற்கு, ஒருவரின் உதவியோடு பைபிளைப் படிக்கும் திட்டம் என்ற பக்கத்தைப் பாருங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு பைபிள் படிப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம்! என்ற வீடியோவைப் பாருங்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள்
யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கடவுளை வணங்குவதற்காக ராஜ்ய மன்றம் என்ற இடத்தில் ஒன்றுகூடி வருகிறோம். இந்தக் கூட்டங்களில் நாங்கள் பைபிளைப் பற்றி கலந்துபேசுகிறோம். அதன்படி வாழ்க்கையில் எப்படி நடக்கலாம் என்பதையும் கற்றுக்கொள்கிறோம்.
இந்தக் கூட்டங்களில் யார் வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளலாம். நீங்கள் யெகோவாவின் சாட்சியாக இல்லை என்றாலும் கலந்துகொள்ளலாம். உங்கள் ஊரில் இருக்கிற சூழ்நிலைமையைப் பொறுத்து நீங்கள் நேரிலும் கலந்துகொள்ளலாம் அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாகவும் கலந்துகொள்ளலாம்.
இந்தக் கூட்டங்கள் எப்படி நடக்கும் என்று தெரிந்துகொள்ள ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் கூட்டங்கள் எங்கே நடக்கின்றன என்று தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டங்கள் என்ற பக்கத்தைப் பாருங்கள்.
ஆன்லைன் கட்டுரைகளும் வீடியோக்களும்
இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்களைப் பற்றியும் அவர் செய்த உயிர் தியாகம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள இந்த வெப்சைட்டில் நிறைய கட்டுரைகளும் வீடியோக்களும் இருக்கின்றன.
உதாரணத்துக்கு, ஒருவர் இறந்ததால் எப்படி பல கோடி மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு “இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?”, “இயேசு ஏன் அந்தளவு கஷ்டப்பட்டு இறந்தார்?” போன்ற கட்டுரைகளையும், இயேசு ஏன் இறந்தார்? என்ற வீடியோவையும் பாருங்கள்.