காது கேட்காதவர்கள்மேல் கடவுள் எப்படி அக்கறை காட்டுகிறார்?
இன்று உலக ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 70 லட்சம் காது கேட்காத மக்கள் இருக்கிறார்கள். 200-க்கும் அதிகமான சைகை மொழிகள் இருப்பதால் தங்களுக்கு தெரிந்த சைகை மொழியில் அவர்கள் பேசுகிறார்கள். வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்களை பொதுவாக மக்கள் அநியாயமாகத்தான் நடத்துகிறார்கள். அதைப் பற்றி சில அறிக்கைகளைப் பார்க்கலாம்:
“காது கேட்காதவர்கள் மற்றும் ஓரளவுக்கு மட்டுமே காது கேட்கிறவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்ல, எல்லா இடத்திலும் இதே நிலைமைதான்.”—நேஷனல் அசோஷியேஷன் ஆஃப் த டெஃப் (ஐ.மா).
“வளர்ந்து வரும் நாடுகளில் காது கேட்காதவர்கள் பரம ஏழைகளாக இருக்கிறார்கள். நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, தகவல்களை பெறுவது அவர்களுக்குப் பெரும்பாடாக இருக்கிறது.”—உவர்ல்ட் ஃபெடரேஷன் ஆஃப் த டெஃப்.
காது கேட்காதவர்கள் படுகிற கஷ்டங்களைப் பார்க்கும்போது கடவுளுக்கு எப்படி இருக்கும்? பைபிள் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது? யெகோவாவின் சாட்சிகள் இன்றைக்கு எப்படி அவர்களுக்கு உதவுகிறார்கள்?
காது கேட்காதவர்களை கடவுள் எப்படிப் பார்க்கிறார்?
காது கேட்காதவர்கள்மேல் யெகோவா தேவன் ரொம்ப அக்கறை வைத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. a அவர்களை மற்றவர்கள் நியாயமாக நடத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவர் கொடுக்கிற கல்வியில் இருந்து அவர்கள் பிரயோஜனம் அடைய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.
வசனம்: “காது கேட்காதவனைச் சபித்துப் பேசக் கூடாது.”—லேவியராகமம் 19:14.
அர்த்தம்: பூர்வ இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா கொடுத்த சட்டம் காது கேட்காதவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தது.
வசனம்: “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.”—அப்போஸ்தலர் 10:34.
அர்த்தம்: கலாச்சாரம், பின்னணி, மொழி என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லா மக்கள் மேலும், காது கேட்காதவர்கள் மேலும், யெகோவா அக்கறை காட்டுகிறார்.
வசனம்: “இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்.”—மத்தேயு 9:35.
அர்த்தம்: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும், காது கேட்காதவர்கள் உட்பட எல்லா மக்களுக்கும் அந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றியும் கற்றுக்கொடுக்க இயேசு பூமிக்கு வந்தார்.—மத்தேயு 6:10.
வசனம்: இயேசு, ‘காது கேட்காதவர்களைக் கேட்க வைத்தார், பேச முடியாதவர்களைப் பேச வைத்தார்.’—மாற்கு 7:37.
அர்த்தம்: ஒரு சந்தர்ப்பத்தில் காது கேட்காத ஒருவனை குணப்படுத்துவதற்கு முன்பு அவனுடைய கேட்கும் திறனையும் பேசும் திறனையும் சரிப்படுத்தப் போவதாக இயேசு சைகை மூலம் தெரிவித்தார். இப்படி கடவுளுடைய அரசாங்கத்தில் காது கேட்காதவர்களால் கேட்கவும் பேசவும் முடியும் என்று செய்து காட்டினார்.—மாற்கு 7:31-35.
வசனம்: “காது கேட்காதவர்களுக்குக் காது கேட்கும்.”—ஏசாயா 35:5.
அர்த்தம்: காது கேட்காதவர்களுக்கு காது நன்றாக கேட்கும் காலம் வரும் என்று யெகோவா முன்கூட்டியே சொன்னார்.—ஏசாயா 29:18.
இன்றைக்கு யெகோவாவின் சாட்சிகள் காது கேட்காதவர்களுக்கு எப்படி உதவுகிறார்கள்?
உலகம் முழுவதும் இருக்கிற காது கேட்காத மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் இந்த நம்பிக்கையான செய்தியை சொல்கிறோம். இதை எப்படிச் செய்கிறோம்? 100-க்கும் அதிகமான சைகை மொழிகளில் பைபிளையும் பைபிளைப் பற்றி கற்றுக்கொடுக்கிற வீடியோக்களையும் தயாரிக்கிறோம். சைகை மொழியில் பைபிளைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம், சபைக் கூட்டங்களையும் நடத்துகிறோம். இதை நாங்கள் இலவசமாக செய்கிறோம். ஏனென்றால் இயேசு இப்படிக் கட்டளைக் கொடுத்தார்: “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.”—மத்தேயு 10:8.
இந்த வீடியோக்களை நீங்கள் ஆன்லைனில் பார்க்கலாம் அல்லது உங்களுடைய எலக்ட்ரானிக் கருவிகளில் டவுன்லோட் செய்துகொள்ளலாம். எப்படி?
JW.ORG. இந்த வெப்சைட்டின் எல்லா பக்கத்திலும் மொழி பட்டன் இருக்கும். அதைக் கிளிக் செய்தால் ஒரு குறிப்பிட்ட சைகை மொழியில் இருக்கும் தகவல்களைப் படிக்கலாம்.
JW லைப்ரரி சைகை மொழி அப்ளிகேஷன். இந்த ஆப்-ஐ இலவசமாக இன்ஸ்டால் செய்து சைகை மொழி வீடியோக்களைக் காணலாம் அல்லது டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
பைபிளைக் கற்றுக்கொடுக்க நாங்கள் என்ன செய்கிறோம்?
சைகை மொழி பைபிள். அமெரிக்கன் சைகை மொழியில் பரிசுத்த வேதாகமம் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்தான் உலகத்திலேயே முதன் முதலில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட சைகை மொழி பைபிள். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாகவோ பகுதிகளாகவோ நிறைய சைகை மொழிகளில் கிடைக்கின்றன. இனி வரும் வருடங்களில் இன்னும் நிறைய மொழிகளில் அது கிடைக்கும். (எந்தெந்த மொழிகளில் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளவும் பைபிளை ஆன்லைனில் பார்க்கவும் “ சைகை மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
சைகை மொழியில் பைபிள் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ள அமெரிக்கன் சைகை மொழியில் முழுமையான புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் (ஆங்கிலம்) என்ற வீடியோவைப் பாருங்கள்.
நீங்கள் பைபிளை ரசித்து வாசிக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் JW லைப்ரரி சைகை மொழி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள். நீங்கள் பார்க்க விரும்புகிற குறிப்பிட்ட சில வசனங்களை சைகை மொழி பைபிளில் பார்க்கும் வசதி இதில் இருக்கிறது.
டிமிட்ரோவும் வீட்டாவும் காது கேட்காத தம்பதிகள். ஆனால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு காது கேட்கும். ஒவ்வொரு நாளும் சைகை மொழியில் பைபிளைப் பார்ப்பதால் அந்தக் குடும்பம் எப்படி பயனடைந்திருக்கிறது என்று பாருங்கள்.
பைபிளைப் பற்றி கற்றுத்தரும் வீடியோக்கள். நிறைய சைகை மொழி வீடியோக்களை யெகோவாவின் சாட்சிகள் தயாரித்திருக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களில் பைபிள் சொல்கிற நடைமுறையான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளவும் பின்பற்றவும் இந்த வீடியோக்கள் உதவுகின்றன:
ஒருவரின் உதவியோடு பைபிளைப் படிக்கும் திட்டம். பைபிளைப் பற்றிக் கற்றுக்கொடுக்கிற ஒருவரின் உதவியோடு உங்களுக்கு வசதியான நேரத்தில் சைகை மொழியில் பைபிளைக் கற்றுக்கொள்ளுங்கள். இலவச பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படும் என்று காட்டச் சொல்லிக் கேளுங்கள்.
ஜேசன் சனோஜோனன் பிலிப்பைன்சில் வாழ்கிறார். கடவுளிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள இந்த பைபிள் படிப்பு அவருக்கு எப்படி உதவியது என்று பாருங்கள்.
மாரியோ அந்தொனஸ் என்பவர் ஹோண்டுராஸில் சர்ச் பாதிரியாக இருந்தார். பைபிளைப் பற்றி அவருக்கு இருந்த கேள்விகளுக்கு எப்படி பதில் கிடைத்தது என்று பாருங்கள். “எனக்குப் பதில்களைவிட கேள்விகள்தான் அதிகம் இருந்தன” என்ற கட்டுரையில் தன்னுடைய கதையை அவர் சொல்கிறார்.
கூட்டங்கள், நிகழ்ச்சிகள். எங்களுக்கு உலகம் முழுவதும் சைகை மொழி சபைகளும் தொகுதிகளும் இருக்கின்றன. அங்கே காது கேட்காதவர்கள் ஒன்றுகூடி கடவுளைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள், அவரை வணங்குகிறார்கள். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வருஷமும் பைபிளைக் கற்றுக்கொள்ள பெரிய மாநாடுகளை நடத்துகிறோம். அதோடு, காது கேட்காமலும் பார்வை இல்லாமலும் இருக்கிறவர்களுக்கு தொடுதல் முறையிலும் கற்றுக்கொடுக்கிறோம். பிரெயில் மொழியிலும் பிரசுரங்களை இலவசமாக கொடுக்கிறோம்.
உங்களுக்குப் பக்கத்தில் கூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடியுங்கள்.
வருடா வருடம் நடக்கிற எங்களுடைய மாநாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
வருடத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சியான இயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.
ஹோசே லி அயாலா மெக்சிகோவில் வாழ்கிறார். அவருக்கு பிறவியிலேயே காது கேட்காது, பின்பு கண் பார்வையும் போய்விட்டது. பைபிளை திறமையாக கற்றுக்கொடுக்க அவருக்கு எப்படி உதவி கிடைத்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
a யெகோவா என்பது கடவுளுடைய தனிப்பட்ட பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.