விழிப்புடன் இருங்கள்!
சோஷியல் மீடியாவால் பிள்ளைக்கு ஆபத்தா?—அப்பா அம்மாக்கு பைபிள் தரும் உதவி
“இளம் பிள்ளைகள் மத்தியில் மன அழுத்தம் ஒரு மோசமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு சோஷியல் மீடியா ஒரு முக்கியமான காரணம்.”—டாக்டர் விவேக் மூர்த்தி, அமெரிக்க தலைமை அறுவை சிகிச்சையாளர், நியு யார்க் டைம்ஸ், ஜூன் 17, 2024.
சோஷியல் மீடியாவால் வரும் ஆபத்துகளிலிருந்து அப்பா அம்மா தங்கள் பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம்? இதோ சில டிப்ஸ்:
பெற்றோர் என்ன செய்யலாம்?
இந்த பைபிள் ஆலோசனைகளை யோசித்துப் பாருங்கள்.
“சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
சோஷியல் மீடியாவால் உங்கள் பிள்ளைகளுக்கு ஆபத்து வரலாம். அதனால் உங்கள் பிள்ளை சோஷியல் மீடியாவைப் பயன்படுத்த வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து முடிவு பண்ணுங்கள். ஒருவேளை உங்கள் பிள்ளையை சோஷியல் மீடியாவைப் பயன்படுத்த விடலாம் என்று நீங்கள் நினைத்தால், இதையெல்லாம் உறுதிசெய்துகொள்ளுங்கள்: உங்கள் பிள்ளை, தன் நேரத்தையெல்லாம் அதிலேயே வீண் அடிக்காமல் இருப்பானா? சோஷியல் மீடியாவில் நல்ல நண்பர்களோடுதான் பழகுவானா? தப்பான விஷயங்களைப் பார்க்காமல் இருப்பானா?
கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “என்னுடைய பிள்ளை சோஷியல் மீடியாவை பயன்படுத்த வேண்டுமா?” என்ற கட்டுரையையும் “சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.
“உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:16.
உங்கள் பிள்ளை சோஷியல் மீடியாவைப் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்றால் அதற்கு சில வரம்புகளை வையுங்கள். அவர்களுடைய பாதுகாப்புக்காகத்தான் அப்படிச் செய்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். உங்களுடைய பிள்ளை நடந்துகொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று கவனியுங்கள். அப்படித் தெரிந்தால், சோஷியல் மீடியாவை அவர்கள் அளவாகப் பயன்படுத்துவதற்கு உதவி செய்யுங்கள்.
வரம்புகளை வைப்பது அவர்களுடைய பாதுகாப்புக்காகத்தான் என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைப்பதற்கு, சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைப் பாருங்கள்.
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
“சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) அதேசமயத்தில், அந்தக் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு தேவையான நிறைய நல்ல நல்ல ஆலோசனைகளையும் கொடுக்கிறது. அது இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே உதவும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உதவுகிற 20-க்கும் அதிகமான கட்டுரைகளும் வீடியோக்களும், சோகத்தின் உச்சத்தில் டீனேஜ் பிள்ளைகள் என்ற கட்டுரையில் இருக்கின்றன.