Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்ன பதில் சொல்வீர்கள்?

என்ன பதில் சொல்வீர்கள்?

என்ன பதில் சொல்வீர்கள்?

எங்கே நடந்தது?

1. இந்தச் சம்பவம் எந்த நகரில் நடந்தது?

உதவிக் குறிப்பு: அப்போஸ்தலர் 18:1-3-ஐ வாசியுங்கள்.

இந்த வரைபடத்தில் வட்டமிட்டுக் காட்டுங்கள்.

ரோமாபுரி

கொரிந்து

எபேசு

தர்சு

◼ இந்த மூன்று பேரும் என்ன செய்கிறார்கள்?

.....

◼ இங்குள்ள கணவன், மனைவியின் பெயர்கள் என்ன, அவர்களுடைய நண்பரின் பெயர் என்ன?

.....

கலந்தாலோசிப்புக்கு:

இந்தக் கணவனும் மனைவியும் வேறு யாருக்குக்கூட உதவி செய்தார்கள்?

உதவிக் குறிப்பு: அப்போஸ்தலர் 18:24-26-ஐ வாசியுங்கள்.

இவர்கள் எந்த வேலையை மிகவும் விரும்பிச் செய்தார்களென நினைக்கிறீர்கள், ஏன்?

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

[பக்கம் 31-ன் படக்குறிப்பு]

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 3 தன் குடும்பத்தாரைக் கவனிக்காதவர் யாரைவிட மோசமானவராக இருப்பார்? 1 தீமோத்தேயு 5:________

பக்கம் 5 ஒருவராக இருப்பதைவிட இருவராக இருப்பது ஏன் நலமானது? பிரசங்கி 4:________

பக்கம் 11 யார் மத்தியில் ஞானத்தைக் கண்டடையலாம்? யோபு 12:________

பக்கம் 29 ஒருவர் எதிலிருந்து விலகியிருக்க வேண்டும்? 1 தெசலோனிக்கேயர் 4:________

நியாயாதிபதியான கிதியோனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நியாயாதிபதிகள் 6:1–7:25-ஐ வாசியுங்கள். பின்பு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

2. .....

அவர் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

3. .....

அவர் இஸ்ரவேலரை எந்தத் தேசத்தாரிடமிருந்து காப்பாற்றினார்?

4. .....

சரியா, தவறா? அவர் மோசேக்கு முன்பு வாழ்ந்தவர்.

கலந்தாலோசிப்புக்கு:

யெகோவாவால் முதலில் நியமிக்கப்பட்டபோது கிதியோன் என்ன குணத்தை வெளிக்காட்டினார்?

உதவிக் குறிப்பு: நியாயாதிபதிகள் 6:14-16-ஐ வாசியுங்கள்.

அது நல்ல குணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன் என்று விளக்குங்கள்.

◼ பதில்கள் பக்கம் 27–ல்

பக்கம் 31-ல் உள்ள கேள்விக்குப் பதில்கள்

1. கொரிந்து.

◼ கூடாரம் தயாரிக்கிறார்கள்.

◼ ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள், மற்றும் பவுல்.

2. மனாசே.—நியாயாதிபதிகள் 6:15.

3. மீதியானியர்.—நியாயாதிபதிகள் 6:6.

4. தவறு.