Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக...

விட்டுக்கொடுத்து வாழ்றதுதான் வாழ்க்கை

விட்டுக்கொடுத்து வாழ்றதுதான் வாழ்க்கை

விட்டுக்கொடுக்கிறது ஏன் கஷ்டம்?

சில நேரத்துல, நீங்க ஒன்னு சொல்வீங்க, உங்க மனைவி ஒன்னு சொல்வாங்க; அப்போ, நீங்க என்ன செய்வீங்க? *

  1. ‘நான் சொல்றதைதான் செய்யனும்’னு பிடிவாதமா இருப்பீங்களா?

  2. உங்க மனைவி சொல்றதை அப்படியே ஏத்துக்குவீங்களா?

  3. ரெண்டு பேருமே விட்டுக்கொடுத்து போவீங்களா?

‘ரெண்டு பேருமே விட்டுக்கொடுத்து போனா, நான் ஆசைப்பட்ட மாதிரியும் நடக்காது, அவங்க ஆசைப்பட்ட மாதிரியும் நடக்காது; அப்புறம் ஏன் விட்டுக்கொடுக்கனும்?’னு சிலர் நினைக்கிறாங்க.

‘உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்’னு நினைக்கிறதுதான் விட்டுக்கொடுக்கிறதா? கண்டிப்பா இல்லை. விட்டுக்கொடுக்கிறதுனா என்னனு இந்த கட்டுரையில பார்க்கலாம்.

விட்டுக்கொடுக்கிறதுனா என்ன?

சேர்ந்து முடிவெடுக்கனும். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி எதுவா இருந்தாலும் நீங்களாவே முடிவு செஞ்சிருப்பீங்க. ஆனா இப்போ, நீங்க சேர்ந்துதான் முடிவெடுக்கனும். ‘சேர்ந்து முடிவெடுக்கும்போது என் இஷ்டப்படி எதுவும் செய்ய முடியாதே’னு நீங்க கவலைப்படலாம். ஆனா, அப்படி செய்றதுதான் ரொம்ப நல்லது. “நானே ஒரு முடிவெடுக்கிறதைவிட கணவரோட பேசி முடிவெடுத்தா, பிரச்சினையை ஈஸியா சமாளிக்க முடியுது”னு அலெக்ஸான்ட்ரா சொல்றாங்க.

மனைவி சொல்றதையும் யோசிச்சு பார்க்கனும். ஜான் காட்மன் என்ற திருமண ஆலோசகர் இப்படி சொல்றார்: “உங்க மனைவி/கணவன் சொல்ற எல்லாத்தையும் நீங்க ஒத்துக்கனும்னு அவசியம் இல்லை. ஆனா, அவங்க என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. . . . உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினையை பத்தி பேசிட்டு இருக்கும்போது, ‘நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்’ற மாதிரி நடந்துக்காதீங்க. அப்படி செஞ்சீங்கனா, உங்க பிரச்சினைக்கு தீர்வே கிடைக்காது.” * (அடிக்குறிப்பை பாருங்க.)

பிடிவாதமா இருக்கக் கூடாது. ‘நான் பிடிச்ச முயலுக்கு மூனு காலு’னு நினைக்கிற ஒருத்தரோட யாருக்குதான் வாழ பிடிக்கும்! அதனால, கணவனும் மனைவியும் சில சமயம் விட்டுக்கொடுத்துதான் போகனும். இதை பத்தி ஜூன் என்ற பெண் இப்படி சொல்றாங்க: “என் கணவர் சந்தோஷத்துக்காக நான் விட்டுக்கொடுப்பேன்; என் சந்தோஷத்துக்காக அவரும் விட்டுக்கொடுப்பார்; இப்படி விட்டுக்கொடுத்து வாழ்றதுதாங்க வாழ்க்கை.”

என்ன செய்யலாம்?

கோவமா பேசாதீங்க. எடுத்தவுடனே கோவமா பேசுனா அது சண்டையிலதான் போய் முடியும். கோவமா பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால, பைபிள் சொல்ற மாதிரி எப்பவும் “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்க.” (கொலோசெயர் 3:12) இந்த மாதிரி நடந்துக்கிட்டா, வாக்குவாதம் செய்யாம, பிரச்சினையை நிதானமா பேசித் தீர்க்க முடியும்.—பைபிள் ஆலோசனை: கொலோசெயர் 4:6.

ஒத்துப்போற விஷயங்களை பேசுங்க. சில நேரங்கள்ல, விட்டுக்கொடுக்கனும்னு நீங்க நினைச்சாலும் பிரச்சினை பெருசாயிட்டே போகும். அதுக்கு காரணம் என்ன தெரியுமா? உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகாத விஷயங்களை பத்தியே பேசிட்டு இருந்திருப்பீங்க. அதனால, எந்த விஷயங்கள்ல ஒத்துப்போறீங்கனு முதல்ல யோசிச்சு பாருங்க. இதை எப்படி செய்றது?

ஒரு பிரச்சினையை பத்தி பேசிட்டு இருக்கும்போது எதை விட்டுக்கொடுக்க முடியும், எதை விட்டுக்கொடுக்க முடியாதுனு ரெண்டு பேரும் தனித்தனியா ஒரு லிஸ்ட் (list) போடுங்க. அப்புறம், அதை பத்தி ரெண்டு பேரும் சேர்ந்து பேசுங்க. அப்படி பேசும்போது, நீங்க ரெண்டு பேருமே நிறைய விஷயங்கள்ல ஒத்துப்போறதை புரிஞ்சிக்குவீங்க. ஒருவேளை ஒத்துப்போகலனாகூட, நீங்க போட்ட லிஸ்டை வெச்சு ஒரு முடிவுக்கு வர முடியும்.

சேர்ந்து பேசி முடிவெடுங்க. சில பிரச்சினையை ஈஸியா சரிபண்ணிடலாம். ஆனா, சில பிரச்சினை சேர்ந்து முடிவெடுத்தாதான் சரியாகும். நீங்க தனியா யோசிச்சு ஒரு பிரச்சினையை தீர்க்கிறதைவிட சேர்ந்து பேசி முடிவு எடுக்கும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாவும் இருப்பீங்க.—பைபிள் ஆலோசனை: பிரசங்கி 4:9.

தாராளமா விட்டுக்கொடுங்க. “ஒவ்வொருவனும் தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்”னு பைபிள் சொல்லுது. (எபேசியர் 5:33) ரெண்டு பேருமே அன்பாவும் மரியாதையாவும் நடந்துக்கிட்டா ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்குவீங்க; உங்க மனைவி (அல்லது கணவன்) சொல்றதையும் ஏத்துக்குவீங்க. கேம்ரன் என்ற ஒருத்தர் இப்படி சொல்றார்: “மனைவிமேல அன்பு இருந்தா, நமக்கு பிடிக்கவே பிடிக்காதுனு நினைச்ச விஷயங்கள்கூட கல்யாணத்துக்கு அப்புறம் பிடிக்க ஆரம்பிச்சிடும்.”—பைபிள் ஆலோசனை: ஆதியாகமம் 2:18. ▪ (g14-E 12)

^ பாரா. 4 இந்த கட்டுரையில இருக்கிற ஆலோசனைகள் கணவன்-மனைவி ரெண்டு பேருக்குமே பொருந்தும்.

^ பாரா. 12 திருமண வாழ்க்கை சிறக்க ஏழு ஆலோசனைகள் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.