காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2014  

மோசேயைப் போல நாமும் எப்படி விசுவாசமுள்ளவர்களாய் இருக்கலாம், குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவது பற்றி யெகோவா என்ன சொல்கிறார், அதை நிறைவேற்ற அவர் எப்படி உதவுகிறார் ஆகிய விஷயங்களை இந்தப் பத்திரிகையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

பாவ ஆசைகளை நிராகரித்து கடவுள் கொடுத்த வேலைகளை உயர்வாகக் கருத விசுவாசம் மோசேக்கு உதவியது. மோசே ஏன் “தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தினார்”?

நீங்கள் “காணமுடியாதவரை” காண்கிறீர்களா?

யெகோவாமீது மோசேக்கு இருந்த விசுவாசம் அவரை எப்படி மனித பயத்திலிருந்து பாதுகாத்து, கடவுளுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வைக்க உதவியது? உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தினால், உதவத் தயாராக இருக்கும் ஒரு நிஜமான நபராக யெகோவா உங்களுக்குத் தெரிவார்.

வாழ்க்கை சரிதை

ஆசீர்வாதங்களை அள்ளித்தந்த முழுநேர ஊழியம்

முழுநேர ஊழியத்தில் 65 வருடங்கள் செலவிட்ட ராபர்ட் வாலன் அதை மனநிறைவளிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று ஏன் சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முடியாது

சிலர் கை நிறைய பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வேலைக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதால் திருமண உறவு, பிள்ளைகளோடுள்ள உறவு மற்றும் கடவுளோடுள்ள உறவு எப்படிப் பாதிக்கப்படுகின்றன?

தைரியமாயிருங்கள்—யெகோவா உங்கள் துணை!

வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற ஓர் அப்பா, அங்கிருந்து வந்த பிறகு கடவுள்மீது விசுவாசம் வைத்து தன்னுடைய குடும்பத்தின் நிலைமையை எப்படிச் சரிசெய்தார்? குறைந்த வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற அவருக்கு யெகோவா எப்படி உதவினார்?

யெகோவா கண்ணோக்கிப் பார்ப்பதை உணருகிறீர்களா?

யெகோவா நம்மீது அக்கறை காட்டும் ஐந்து வழிகளையும் அன்போடு அவர் நம்மைக் கவனிப்பதால் பெறும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

பண்டைய காலங்களில், ஒருவர் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டது எதை வெளிக்காட்டியது?