Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

ஜெபத்தின் முடிவில் ஏன் “ஆமென்” என்று சொல்லப்படுகிறது?

“ஆமென்” என்ற எபிரெய வார்த்தை, ஆங்கிலத்திலும் கிரேக்குவிலும் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஜெபம், ஆணை, ஆசீர்வாதம், சாபம் ஆகியவற்றைக் கேட்ட பிறகு கடைசியில் எல்லாரும் சேர்ந்து சொல்கிற அந்த வார்த்தை, “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே” என்ற அர்த்தத்தைத் தருகிறது. அது, சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆமோதிப்பதைக் குறிக்கிறது. ஒரு புத்தகத்தின்படி, அந்த வார்த்தை “நிச்சயமானது, உண்மையானது, நம்பகமானது, சந்தேகத்திற்கு இடமில்லாதது என்றெல்லாம் அர்த்தப்படுத்துகிறது.” பைபிள் காலங்களில், ஒருவர் ஆணையிட்டபோதோ ஒப்பந்தம் செய்தபோதோ மற்றவர் “ஆமென்” என்று சொன்னது, சட்டப்படி அதற்குக் கட்டுப்பட்டு நடக்க அவர் ஒப்புக்கொண்டதைக் காட்டியது; அதாவது, அவர் அதை ஏற்றுக்கொண்டதையும், அதை மீறும்போது வரும் விளைவுகளைச் சந்திக்கத் தயாராய் இருந்ததையும் காட்டியது.—உபாகமம் 27:15-26.

இயேசு பிரசங்கித்தபோதும் போதித்தபோதும் சில குறிப்புகளைச் சொல்ல ஆரம்பிக்கையில் “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதன் மூலம், தாம் சொல்லவிருந்த விஷயம் எந்தளவு நம்பகமானது என்பதை வலியுறுத்திக் காட்டினார். அந்தச் சந்தர்ப்பங்களில் “ஆமென்” என்ற வார்த்தை, “உண்மையாகவே” அல்லது “மெய்யாகவே” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 5:18; 6:2, 5; BSI) யோவானின் சுவிசேஷம் முழுவதிலும் காணப்படுவதுபோல், “ஆமென்” என்ற வார்த்தையை இயேசு இருமுறை பயன்படுத்திய சந்தர்ப்பங்களில் அது “உண்மையாகவே உண்மையாகவே” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (யோவான் 1:51) இப்படி அவர் அதை இருமுறை பயன்படுத்தியிருப்பதை சுவிசேஷப் பதிவுகளில் மட்டுமே காண முடிகிறது.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “ஆமென்” என்ற பட்டப்பெயர் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; அவருடைய சாட்சி “உண்மையும் சத்தியமும்” உள்ளது என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.வெளிப்படுத்துதல் 3:14. (w09 6/1)

[பக்கம் 13-ன் படம்]

“ஆமென்,” வெளிப்படுத்துதல் 3:14. பொ.ச. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்