Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | நான் கடவுளுடைய நண்பனாக முடியுமா?

உங்களுக்கு கடவுளுடைய பெயர் தெரியுமா?

உங்களுக்கு கடவுளுடைய பெயர் தெரியுமா?

பேரே தெரியாத ஒருத்தர உங்க நண்பர்னு சொல்வீங்களா? “கடவுளோட நண்பரா இருக்கிறதுக்கு அவரோட பேரை தெரிஞ்சிக்கிறது ரொம்ப முக்கியம்”னு பல்கேரியா நாட்டுல இருக்கிற இரினா சொல்றாங்க. போன கட்டுரையில பார்த்த மாதிரி நாம கடவுளோட நண்பரா ஆகனும்னு கடவுளே விரும்புறார். ‘என் பெயர் யெகோவா’னு அவரே பைபிள்ல சொல்லியிருக்கார்.—எரேமியா 16:21.

பைபிள முதல் முதல்ல எபிரெய மொழிலதான் எழுதினாங்க. அதில கடவுளோட பெயர் சுமார் 7,000 தடவ இருந்தது. பைபிள்ல வேறெந்த பெயரும் இத்தனை தடவ இல்ல. இதிலிருந்து என்ன தெரிஞ்சிக்கலாம்? நாம யெகோவாவோட பெயரை தெரிஞ்சிக்கனும் அதை பயன்படுத்தனும்னு அவரே விரும்புறார். * (அடிக்குறிப்பை பாருங்க.)

‘கடவுள் ரொம்ப ரொம்ப உயர்ந்தவர், புனிதமானவர்; அதனால அவரோட பெயரையே பயன்படுத்தக் கூடாது’னு சிலர் நினைக்கிறாங்க. ஆனா, யெகோவா நம்ம நண்பர். அவரோட பெயரை நாம பயன்படுத்தனும், அதை மத்தவங்களுக்கு சொல்லனும்னு அவரே விரும்புறார். (சங்கீதம் 69:30, 31; 96:2, 8) அதனால, யெகோவாவோட பெயரை நாம பயன்படுத்துறதுல தப்பே இல்ல. அவருக்கு கெட்ட பேர் வர மாதிரிதான் எதையும் செய்யக் கூடாது. “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”னு இயேசுவும் சொன்னார். யெகோவாவோட பெயரை மத்தவங்ககிட்ட சொல்லும்போதுதான் அந்தப் பெயரை பரிசுத்தப்படுத்த முடியும், அதாவது புகழ முடியும். அப்படி செஞ்சா யெகோவாவோட நெருங்கிய நண்பரா ஆவோம்.—மத்தேயு 6:9.

யெகோவாவோட பெயரை உயர்வா மதிக்கிறவங்கள அவருக்கு ரொம்ப பிடிக்கும். (மல்கியா 3:16) “என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்”னு யெகோவா சொல்றார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 91:14, 15, பொது மொழிபெயர்ப்பு) கடவுளோட நண்பரா இருக்கனும்னா அவரோட பெயரை தெரிஞ்சிக்கனும், அதை பயன்படுத்தனும். (w14-E 12/01)

^ பாரா. 4 பழைய ஏற்பாட்டுல யெகோவா என்ற பெயர் நிறைய இடத்தில இருக்கு. ஆனா நிறைய பேர், மொழிபெயர்க்கும்போது யெகோவா என்ற பெயரையே பைபிள்ல இருந்து எடுத்துட்டாங்க. அதுக்கு பதிலா “கர்த்தர்,” “ஆண்டவர்”னு போட்டிருக்காங்க. யெகோவா என்ற பெயரை பைபிள்ல இருந்து ஏன் எடுத்தாங்கனு தெரிஞ்சிக்க, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில 195-197-ஆம் பக்கத்த பாருங்க. இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்.

‘என் பெயர் யெகோவா’னு கடவுளே பைபிள்ல சொல்லியிருக்கார்.—எரேமியா 16:21.