கிறிஸ்தவம் பிற நாடுகளுக்குப் பரவுகிறது
கிறிஸ்தவம் பிற நாடுகளுக்குப் பரவுகிறது
பெத்தானியாவுக்கு அருகேயுள்ள ஒலிவ மலையில் இருக்கையில், பிரசங்க வேலை செய்யும்படி தம் சீஷர்களுக்கு இயேசு பொறுப்பளித்தார். அது உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கும் ஒரு வேலை. பெத்தானியாவிலிருந்து சுமார் இரண்டு மைல் மேற்கேயிருந்த எருசலேமில் அந்த வேலை துவங்கவிருந்தது. பிரசங்கிக்கப்படும் செய்தி எருசலேமுக்கு அருகேயுள்ள யூதேயாவுக்கும் சமாரியாவுக்கும் பிற்பாடு “பூமியின் கடைசிபரியந்தமும்” பரவவிருந்தது.—அப் 1:5, 8, 12.
இயேசு அந்த வார்த்தைகளை சொல்லி சில நாட்களுக்கு பின்பு, பெந்தெகொஸ்தே பண்டிகை வந்தது. அப்பண்டிகைக்கு ரோம பேரரசின் எல்லா பகுதிகளிலிருந்தும் யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் வந்தார்கள். அப்பகுதிகள் கீழேயுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. கூடி வந்திருந்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு அந்த நாளில் பிரசங்கித்ததுதான் கிறிஸ்தவம் படுவேகமாக பரவுவதற்கு வழியை திறந்து வைத்தது.—அப் 2:9-11.
எருசலேமில் துன்புறுத்துதல் தலைதூக்கியதுமே கிறிஸ்துவின் சீஷர்கள் எங்கும் சிதறிப் போனார்கள். சமாரியாவிலுள்ள மக்கள் நற்செய்தியைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்வதற்கு பேதுருவும் யோவானும் உதவினார்கள். (அப் 8:1, 4, 14-16) “எருசலேமிலிருந்து காசா” பட்டணத்துக்குப் போகிற வனாந்தர சாலையில் ஓர் எத்தியோப்பியனுக்கு பிலிப்பு சாட்சி கொடுத்ததன் விளைவாக பிற்பாடு ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் பரவியது. (அப் 8:26-39) ஏறக்குறைய அதே சமயத்தில் சாரோன் சமவெளியிலுள்ள லித்தாவிலும், யோப்பா துறைமுகத்திலும் அந்தச் செய்திக்கு நல்ல பலன் கிடைத்தது. (அப் 9:35, 42) பேதுரு அங்கிருந்து செசரியாவுக்கு சென்றார்; அங்கே ரோம அதிபதியாகிய கொர்நேலியுவும், அவருடைய உற்றார் உறவினர்களும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற கிறிஸ்தவர்களாவதற்கு அவர் உதவினார்.—அப் 10:1-48.
கிறிஸ்தவர்களை முன்பு துன்புறுத்தி வந்த பவுல், பிற்பாடு புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக மாறினார். தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் தனது மூன்று மிஷனரி பயணங்களை மேற்கொண்டார், ரோமாபுரிக்கும் சென்றார். 1பே 5:13) ஆம், கிறிஸ்துவின் மும்முரமான தலைமை வகிப்பில் அவரது சீஷர்கள் வெளிநாடுகளிலும் கிறிஸ்தவத்தை பரப்பினார்கள். பொ.ச. 60/61-க்குள் ‘அந்த நற்செய்தி வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது.’ (கொலோ 1:6, 23) அது முதற்கொண்டு, சொல்லர்த்தமாகவே “பூமியின் கடைசிபரியந்தமும்” இந்த நற்செய்தி எட்டியிருக்கிறது.
இந்த அப்போஸ்தலனும் மற்றவர்களும் ரோம பேரரசின் பல முக்கிய நகரங்களில் நற்செய்தியை பரப்பினார்கள். ஸ்பானியாவிலும் நற்செய்தியை பரப்ப பவுல் ஆசைப்பட்டார் (பக்கம் 2-ஐக் காண்க.); பேதுருவோ கிழக்கே அதிக தொலைவில் பாபிலோன் வரைக்கும் சென்று சேவை செய்தார். ([பக்கம் 32-ன் பெட்டி]
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று நற்செய்தியை கேட்ட யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, லீபியா, ரோமாபுரி, கிரேத்தா, அரபி தேசம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அநேகர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். தங்கள் வீடுகளுக்கு திரும்பியதும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
[பக்கம் 33-ன் பெட்டி]
ஏழு சபைகள்
ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்கு இயேசு செய்திகளை அனுப்பினார். அவை இருந்த இடங்களைப் பாருங்கள்: கடற்கரைப் பகுதிகளான எபேசு, சிமிர்னா; உள்நாட்டு பகுதிகளான பெர்கமு, பிலதெல்பியா, லவோதிக்கேயா; ஆற்றங்கரையில் அமைந்த தியத்தீரா; ஒரு முக்கிய வியாபார மார்க்கத்தில் அமைந்த சர்தை. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இடங்கள் உண்மையானவை என்பதை இந்தப் பட்டணங்களின் இடிபாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
[பக்கம் 32-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நற்செய்தி விரைவில் சென்றெட்டிய இடங்கள்
B1 இல்லிரிக்கம்
B1 இத்தாலியா
B1 ரோமாபுரி
C1 மக்கெதோனியா
C2 கிரேக்கு
C2 அத்தேனே
C2 கிரேத்தா
C3 சிரேனே
C3 லீபியா
D1 பித்தினியா
D2 கலாத்தியா
D2 ஆசியா
D2 பிரிகியா
D2 பம்பிலியா
D2 சீப்புரு
D3 எகிப்து
D4 எத்தியோப்பியா
E1 பொந்து
E2 கப்பத்தோக்கியா
E2 சிலிசியா
E2 மெசொப்பொத்தாமியா
E2 சீரியா
E3 சமாரியா
E3 எருசலேம்
E3 யூதேயா
F2 மேதியா
F3 பாபிலோன்
F3 ஏலாம்
F4 அரபி தேசம்
G2 பார்த்தியா
[நீர்நிலைகள்]
C2 மத்தியதரைக் கடல்
D1 கருங்கடல்
E4 செங்கடல்
F3 பெர்சிய வளைகுடா
[பக்கம் 32, 33-ன் தேசப்படம்]
பவுலின் பயணங்கள்
முதலாம் மிஷனரி பயணம் (அப் 13:1–14:28)
H3 அந்தியோகியா (சீரியா)
H3 செலூக்கியா
G4 சீப்புரு
G3 சாலமி
G4 பாப்போ
G3 பம்பிலியா
F3 பெர்கே
F3 பிசீதியா
F2 அந்தியோகியா (பிசீதியா)
G2 இக்கோனியா
G2 லிக்கவோனியா
G2 லீஸ்திரா
G3 தெர்பை
G2 லீஸ்திரா
G2 இக்கோனியா
F2 அந்தியோகியா (பிசீதியா)
F3 பிசீதியா
G3 பம்பிலியா
F3 பெர்கே
F3 அத்தலியா
H3 அந்தியோகியா (சீரியா)
இரண்டாம் மிஷனரி பயணம் (அப் 15:36–18:22)
H3 அந்தியோகியா (சீரியா)
H3 சீரியா
H3 சிலிசியா
H3 தர்சு
G3 தெர்பை
G2 லீஸ்திரா
G2 இக்கோனியா
F2 அந்தியோகியா (பிசீதியா)
F2 பிரிகியா
G2 கலாத்தியா
E2 மீசியா
E2 துரோவா
E1 சாமோத்திராக்கே
D1 நெயாப்போலி
D1 பிலிப்பி
C1 மக்கெதோனியா
D1 அம்பிபோலி
D1 தெசலோனிக்கே
D1 பெரோயா
C2 கிரேக்கு
D2 அத்தேனே
D2 கொரிந்து
D3 அகாயா
E2 எபேசு
G4 செசரியா
H5 எருசலேம்
H3 அந்தியோகியா (சீரியா)
மூன்றாம் மிஷனரி பயணம் (அப் 18:22–21:19)
H3 சீரியா
H3 அந்தியோகியா (சீரியா)
G2 கலாத்தியா
F2 பிரிகியா
H3 சிலிசியா
H3 தர்சு
G3 தெர்பை
G2 லீஸ்திரா
G2 இக்கோனியா
F2 அந்தியோகியா (பிசீதியா)
E2 எபேசு
E2 ஆசியா
E2 துரோவா
D1 பிலிப்பி
C1 மக்கெதோனியா
D1 அம்பிபோலி
D1 தெசலோனிக்கே
D1 பெரோயா
C2 கிரேக்கு
D2 அத்தேனே
D2 கொரிந்து
D1 பெரோயா
D1 தெசலோனிக்கே
D1 அம்பிபோலி
D1 பிலிப்பி
E2 துரோவா
E2 ஆசோ
E2 மித்திலேனே
E2 கீயு
E2 சாமு
E3 மிலேத்து
E3 கோஸ்
E3 ரோது
F3 பத்தாரா
H4 தீரு
H4 பித்தொலோமாய்
G4 செசரியா
H5 எருசலேம்
ரோமாபுரிக்கு பயணம் (அப் 23:11–28:31)
H5 எருசலேம்
G4 செசரியா
H4 சீதோன்
F3 மீறா
F3 லீசியா
E3 கினீது
D3 கிரேத்தா
D4 கிலவுதா
A3 மெலித்தா
A3 சிசிலி
A3 சீரகூசா
A1 இத்தாலியா
B2 ரேகியு
A1 புத்தேயோலி
A1 ரோமாபுரி
முக்கிய சாலைகள் (புத்தகத்தைப் பார்க்கவும்)
[ஏழு சபைகள்]
E2 பெர்கமு
E2 தியத்தீரா
E2 சர்தை
E2 சிமிர்னா
E2 எபேசு
F2 பிலதெல்பியா
F2 லவோதிக்கேயா
[மற்ற இடங்கள்]
E3 பத்மு
F2 கொலோசெ
F5 அலெக்சந்திரியா
F5 எகிப்து
G1 பித்தினியா
G5 யோப்பா
G5 லித்தா
G5 காசா
H1 பொந்து
H2 கப்பத்தோக்கியா
H4 தமஸ்கு
H4 பெல்லா
[நீர்நிலைகள்]
D4 மத்தியதரைக் கடல்
[பக்கம் 33-ன் படம்]
மிலேத்து பட்டணத்தின் அரங்கம்; இப்பட்டணத்தில் எபேசிய மூப்பர்களை பவுல் சந்தித்துப் பேசினார்
[பக்கம் 33-ன் படம்]
பெர்கமுவில் ஜியஸ் தெய்வத்திற்கு கட்டப்பட்ட பலிபீடம். இந்தப் பட்டணத்து கிறிஸ்தவர்கள் ‘சாத்தானுடைய சிங்காசனமிருந்த இடத்தில்’ குடியிருந்தார்கள்—வெளி 2:13