Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 3

ராகாப் யெகோவாவை நம்பினாள்

ராகாப் யெகோவாவை நம்பினாள்

கானான் நாட்டுல எரிகோ-னு ஒரு ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்தவங்க யெகோவாவை வணங்கல. ராகாப் அந்த ஊர்லதான் இருந்தாங்க.

ராகாப் சின்னப் பிள்ளையா இருக்கும்போது, யெகோவாவை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டாங்க. இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வந்தப்போ, மோசே செங்கடலை ரெண்டா பிரிச்சார். இஸ்ரவேல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் சண்டை வந்தப்போ யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு உதவி செய்தார். இதெல்லாம் ராகாபுக்குத் தெரியும். ஒருநாள் எரிகோ மக்களோட சண்டை போடுறதுக்கு இஸ்ரவேல் மக்கள் வந்தாங்க.

ராகாப் யெகோவாவை நம்பினாங்க. அதனால உளவாளிகளை காப்பாத்தினாங்க

அப்போ ஒருநாள் சாயங்காலம், ரெண்டு இஸ்ரவேலர் யாருக்கும் தெரியாம எரிகோவை பார்க்க வந்தாங்க. அவங்கதான் உளவாளிகள். அவங்க ராகாப் வீட்டுக்கு வந்தாங்க. ராகாப் அவங்க ரெண்டு பேரையும் வீட்டில தங்க வைச்சாங்க. அவங்க வந்த விஷயம் எரிகோ நாட்டு ராஜாவுக்கு தெரிஞ்சிடுச்சு. ராகாப் வீட்டுலதான் இருக்காங்கனு தெரிஞ்சிடுச்சு. உடனே அவங்க ரெண்டு பேரையும் பிடிச்சிட்டு வர ஆட்களை அனுப்பினார். ராகாப் அந்த உளவாளிகள் ரெண்டு பேரையும் மொட்டை மாடியில ஒளிஞ்சிக்க சொன்னாங்க. ராஜாவோட ஆட்கள்கிட்ட, ‘அந்த ரெண்டு பேரும் இங்கே இருந்து போயிட்டாங்க, சீக்கிரம் போங்க. போய் பிடிங்க’னு சொன்னாங்க. ராகாப் ஏன் அந்த உளவாளிகளை காப்பாத்துனாங்க?— ராகாபுக்கு யெகோவா மேல ரொம்ப நம்பிக்கை. கானான் நாட்டை இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா கொடுப்பார்னு அவங்க நம்புனாங்க. அதனாலதான் அந்த உளவாளிகளை காப்பாத்துனாங்க.

ராகாப் சொன்னதை கேட்டு ராஜாவோட ஆட்கள் போயிட்டாங்க. அதுக்கு அப்புறம், அந்த உளவாளிகள் ரெண்டு பேரும் ராகாப் வீட்டிலிருந்து கிளம்பினாங்க. ‘நாங்க எரிகோவை அழிக்கப்போறோம். ஆனா உங்களையும் உங்க சொந்தக்காரங்களையும் கண்டிப்பா காப்பாத்துவோம்’னு ராகாப்கிட்ட சொன்னாங்க. ஆனா, அதுக்கு ராகாப் ஒண்ணு செய்யணும். என்ன செய்யணும் தெரியுமா?— ‘ஒரு சிகப்பு கயிறை எடுத்து ஜன்னல்ல தொங்கவிடுங்க. அப்படிச் செஞ்சா, உங்களையும் உங்க வீட்ல இருக்கிறவங்களையும் காப்பாத்துவோம்’னு உளவாளிகள் சொன்னாங்க. ராகாப் அவங்க சொன்ன மாதிரியே செஞ்சாங்க. அப்புறம் என்ன நடந்துச்சு?—

ராகாபையும் அவங்க சொந்தக்காரங்களையும் யெகோவா காப்பாத்தினார்

கொஞ்ச நாளைக்கு அப்புறம், யெகோவா இஸ்ரவேல் மக்கள்கிட்ட பேசினார். ‘எரிகோவை சுத்தி நடந்து போங்க’னு அவங்ககிட்ட சொன்னார். இஸ்ரவேல் மக்கள் ஒரு தடவை அமைதியா எரிகோவை சுத்தி நடந்தாங்க. இதே மாதிரி ஆறு நாள் செஞ்சாங்க. ஏழாவது நாள் ஏழு தடவை எரிகோவை சுத்தி வந்தாங்க. அப்புறம் எல்லாரும் சேர்ந்து சத்தமா கத்துனாங்க. உடனே, அந்த ஊரை சுத்தியிருந்த சுவர் இடிஞ்சு விழுந்துடுச்சு. யெகோவாதான் அதை இடிஞ்சு விழ வைச்சார். ஒரே ஒரு வீடு மட்டும் இடியவேயில்லை. ஆமா, ஜன்னல்ல சிகப்பு கயிறு தொங்கிட்டு இருந்த வீடு மட்டும் இடியவேயில்லை. படத்தை பாரு, அந்த வீடு எங்கே இருக்கு காட்டு?— ஆமா, அதுதான் ராகாப் வீடு. ராகாபும் அவங்க சொந்தக்காரங்களும் பத்திரமா இருந்தாங்க!

ராகாப்கிட்ட நீ என்ன கத்துக்கிட்ட?— ராகாப் யெகோவாவை பத்தி தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. அதனால யெகோவாவை நம்புனாங்க. நீயும் யெகோவாவை பத்தி நிறைய நிறைய படிக்கிறதானே? நீயும் யெகோவாவை நம்புறியா?—