Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 6

வசனங்களைத் தெளிவாகப் பொருத்திக் காட்டுவது

வசனங்களைத் தெளிவாகப் பொருத்திக் காட்டுவது

யோவான் 10:33-36

சுருக்கம்: ஒரு வசனத்தை வெறுமனே வாசித்துவிட்டு அடுத்த குறிப்புக்குப் போய்விடாதீர்கள். நீங்கள் வாசிக்கும் வசனத்துக்கும் நீங்கள் சொல்லும் குறிப்புக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெளிவாக விளக்குங்கள்.

எப்படிச் செய்வது?

  • முக்கிய வார்த்தைகளை எடுத்துக் காட்டுங்கள். ஒரு வசனத்தை வாசித்த பிறகு, முக்கியக் குறிப்போடு நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள வார்த்தைகளைத் திரும்ப வாசியுங்கள் அல்லது ஒரு கேள்வியைக் கேட்டு அந்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்.

  • குறிப்பை வலியுறுத்துங்கள். வசனத்தை எதற்காக வாசிக்கப்போகிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லியிருந்தால், அதற்கும் அந்த வசனத்தில் இருக்கிற முக்கிய வார்த்தைகளுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குங்கள்.

  • எளிமையாகப் பொருத்திக் காட்டுங்கள். முக்கியக் குறிப்போடு சம்பந்தப்படாத விவரங்களைச் சொல்லாதீர்கள். கேட்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே என்ன தெரியும் என்று முதலில் யோசித்துப் பாருங்கள்; பிறகு, எவ்வளவு விவரங்களைச் சொன்னால் அவர்கள் தெளிவாகவும் சுலபமாகவும் புரிந்துகொள்வார்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.