ஆதியாகமம் 9:1-29

9  நோவாவையும் அவருடைய மகன்களையும் கடவுள் ஆசீர்வதித்து, “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.+  பூமியிலுள்ள எல்லா மிருகங்களும், பறக்கிற எல்லா உயிரினங்களும், நிலத்தில் வாழ்கிற மற்ற எல்லா உயிரினங்களும், கடலிலுள்ள எல்லா மீன்களும் முன்பு போலவே உங்களைப் பார்த்துப் பயப்படும். அவற்றை இப்போது உங்கள் கையில்* ஒப்படைக்கிறேன்.+  பூமியில் வாழும் எல்லா மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்.+ நான் உங்களுக்குச் செடிகொடிகளைத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.+  ஆனால், இறைச்சியை நீங்கள் இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது;+ ஏனென்றால், இரத்தம்தான் உயிர்.+  நீங்கள் கொலை செய்யப்பட்டால்,* உங்கள் உயிருக்காக நான் பழிவாங்குவேன். மிருகமாக இருந்தாலும் சரி, மனுஷனாக இருந்தாலும் சரி, நான் பழிவாங்குவேன். தன் சகோதரனை யார் கொலை செய்தாலும் அந்தச் சகோதரனின் உயிருக்காக நான் அவனைப் பழிவாங்குவேன்.+  ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+  நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, இந்தப் பூமியை நிரப்புங்கள்” என்று சொன்னார்.+  பின்பு, நோவாவிடமும் அவருடன் இருந்த மகன்களிடமும் கடவுள் இப்படிச் சொன்னார்:  “இப்போது உங்களோடும் உங்கள் வம்சத்தோடும் நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்.+ 10  உங்களுடன் இருக்கிற பறவைகள், மிருகங்கள் என எல்லா உயிரினங்களோடும், அதாவது பேழையிலிருந்து வெளியே வந்த எல்லா உயிரினங்களோடும்,+ பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். 11  இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் வெள்ளத்தால் அழிக்க மாட்டேன், இனி ஒருபோதும் இந்தப் பூமியை வெள்ளத்தால் நாசமாக்க மாட்டேன் என்று உங்களோடு ஒப்பந்தம் செய்கிறேன்.”+ 12  அதோடு, கடவுள் இதையும் சொன்னார்: “உங்களோடும், உங்களோடு இருக்கிற எல்லா உயிரினங்களோடும், தலைமுறை தலைமுறைக்கும் நான் செய்யும் ஒப்பந்தத்துக்கு அடையாளம் இதுதான். 13  நான் ஒரு வானவில்லை மேகத்தில் வர வைக்கிறேன். இந்தப் பூமியில் வாழ்கிற எல்லாருடனும் நான் செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம். 14  வானத்தில் மேகங்களை நான் வர வைக்கும்போது வானவில்லும் கண்டிப்பாக வரும். 15  அப்போது, உங்களோடும் எல்லா உயிர்களோடும் நான் செய்த ஒப்பந்தத்தை நிச்சயம் நினைத்துப் பார்ப்பேன். பூமியிலுள்ள எல்லா உயிர்களையும் அழிக்க இனி வெள்ளம் வராது.+ 16  மேகத்தில் வானவில் தெரியும்போதெல்லாம், நான் அதைப் பார்த்து, இந்தப் பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் செய்த நிரந்தர ஒப்பந்தத்தை நிச்சயம் நினைத்துக்கொள்வேன்.” 17  கடவுள் மறுபடியும் நோவாவிடம், “இந்தப் பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம்” என்று சொன்னார்.+ 18  பேழையிலிருந்து வெளியே வந்த நோவாவின் மகன்களுடைய பெயர்கள்: சேம், காம், யாப்பேத்.+ பின்பு, காமுக்கு கானான் பிறந்தான்.+ 19  இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியிலிருக்கிற எல்லா மனிதர்களும் இவர்களுடைய வம்சத்தில்தான் வந்தார்கள். பின்பு, மனிதர்கள் பூமி முழுவதும் பரவினார்கள்.+ 20  நோவா விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டார். 21  ஒருநாள், போதை தலைக்கேறும் அளவுக்கு அவர் திராட்சமதுவைக் குடித்துவிட்டு தன் கூடாரத்தில் உடை இல்லாமல் கிடந்தார். 22  கானானின் அப்பாவான காம் தன்னுடைய அப்பா நோவா நிர்வாணமாகக் கிடப்பதைப் பார்த்துவிட்டு, வெளியே போய்த் தன் இரண்டு சகோதரர்களிடம் சொன்னான். 23  உடனே, சேமும் யாப்பேத்தும் ஓர் அங்கியை எடுத்துத் தங்கள் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, பின்னோக்கி நடந்துபோய், தங்களுடைய அப்பாவின் மேல் போட்டார்கள். அவர்களுடைய முகம் எதிர்ப்பக்கமாக இருந்ததால் தங்கள் அப்பா நிர்வாணமாகக் கிடப்பதை அவர்கள் பார்க்கவில்லை. 24  நோவா போதை தெளிந்து எழுந்தபோது தன் இளைய மகன் செய்ததைப் பற்றித் தெரிந்துகொண்டார். 25  அப்போது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்.+ அவனுடைய சகோதரர்களுக்கு அவன் அடிமையாகட்டும்”*+ என்று சொன்னார். 26  அதோடு அவர், “சேமின் கடவுளாகிய யெகோவாவைப் போற்றுகிறேன்,சேமுக்கு கானான் அடிமையாகட்டும்.+ 27  யாப்பேத்துக்குக் கடவுள் மிகப் பெரிய இடத்தைக் கொடுக்கட்டும்,அவன் சேமின் கூடாரங்களில் குடியிருக்கட்டும். கானான் யாப்பேத்துக்கும் அடிமையாகட்டும்” என்று சொன்னார். 28  பெருவெள்ளத்துக்குப் பின்பு, நோவா 350 வருஷங்கள் வாழ்ந்தார்.+ 29  மொத்தம் 950 வருஷங்கள் வாழ்ந்த பின்பு நோவா இறந்துபோனார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பொறுப்பில்.”
நே.மொ., “உங்கள் உயிராகிய இரத்தம் சிந்தப்பட்டால்.”
நே.மொ., “ஒரு மனுஷனுடைய இரத்தத்தை எவனாவது சிந்தினால் அவனுடைய இரத்தத்தை இன்னொரு மனுஷன் சிந்துவான்.”
நே.மொ., “கடவுள் தன்னுடைய சாயலில் மனுஷனை உண்டாக்கியிருக்கிறார்.”
நே.மொ., “அடிமையிலும் அடிமையாகட்டும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா