நீதிமொழிகள் 23:1-35
23 ராஜாவோடு விருந்து சாப்பிட உட்காரும்போது,சூழ்நிலையை மனதில் வைத்துக் கவனமாக நடந்துகொள்.
2 நீ பயங்கர பசியோடு இருந்தாலும்,உன் வாயைக் கட்டிக்கொள்.*
3 அவர் கொடுக்கிற ருசியான உணவுகளைச் சாப்பிடத் துடிக்காதே.அவை உன்னை மோசம்போக்கிவிடும்.
4 சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே.+
அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டு புத்தியோடு நடந்துகொள்.*
5 இல்லாமல்போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்?+அது கழுகைப் போல் இறக்கை விரித்து வானத்துக்குப் பறந்துவிடுமே!+
6 கஞ்சன் தரும் உணவைச் சாப்பிடாதே.அவன் கொடுக்கிற ருசியான உணவுகளைச் சாப்பிடத் துடிக்காதே.
7 ஏனென்றால், அவன் எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்ப்பான்.
“நன்றாகச் சாப்பிடு, குடி” என்று வெறும் பேச்சுக்குத்தான் சொல்வான்.
8 நீ அதைச் சாப்பிட்டபின் வாந்தி எடுத்துவிடுவாய்.நீ பாராட்டிப் பேசியதெல்லாம் வீணாகிவிடும்.
9 முட்டாளின் காதில் விழும்படி எதையும் பேசாதே.+ஏனென்றால், நீ சொல்கிற ஞானமான வார்த்தைகளை அவன் மதிக்க மாட்டான்.+
10 பூர்வ காலத்தில் வைக்கப்பட்ட எல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+அப்பா இல்லாத பிள்ளைகளின் நிலத்தை ஆக்கிரமிக்காதே.
11 ஏனென்றால், அவர்களை விடுவிக்கிறவர்* பலம்படைத்தவர்.அவர்களுக்காக அவரே உன்னோடு வாதாடுவார்.+
12 புத்திமதியை உன் இதயத்தில் வை.அறிவுள்ள வார்த்தைகளை உன் காதில் வாங்கிக்கொள்.
13 பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே.+
நீ பிரம்பால் அடித்தால் அவன் ஒன்றும் செத்துவிட மாட்டான்.
14 நீ அவனைப் பிரம்பால் அடித்தால்தான்கல்லறைக்குப் போகாதபடி அவனைக் காப்பாற்ற முடியும்.
15 என் மகனே, உன் இதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கும்.+
16 உன் உதடுகள் சரியானதைப் பேசினால்,என் உள்ளம்* சந்தோஷத்தில் துள்ளும்.
17 உன் இதயம் பாவிகள்மேல் பொறாமைப்படாமல் இருக்கட்டும்.+நாள் முழுவதும் நீ யெகோவாவுக்குப் பயந்து நட.+
18 அப்போது உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.+உன் நம்பிக்கை வீண்போகாது.
19 என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு ஞானம் அடைந்து,உன் இதயத்தைச் சரியான வழியில் நடத்து.
20 அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடும்,+அளவுக்கு அதிகமாக இறைச்சி சாப்பிடுகிறவர்களோடும் சேர்ந்துகொள்ளாதே.+
21 ஏனென்றால், குடிகாரர்களும் பெருந்தீனிக்காரர்களும் ஏழைகளாவார்கள்.+தூக்க மயக்கத்திலேயே இருப்பவர்கள் கந்தல் துணியைத்தான் உடுத்துவார்கள்.
22 உன்னைப் பெற்ற அப்பாவின் பேச்சைக் கேள்.உன் அம்மாவுக்கு வயதாகிவிட்டதால் அவளை அலட்சியம் செய்யாதே.+
23 சத்தியத்தை வாங்கு,* அதை ஒருபோதும் விற்காதே.+அதேபோல், ஞானத்தையும் புத்திமதியையும் புத்தியையும்* வாங்கு.+
24 நீதிமானைப் பெற்றவன் நிச்சயம் சந்தோஷப்படுவான்.ஞானமுள்ள மகனைப் பெற்றவன் பூரித்துப்போவான்.
25 உன் அப்பாவும் அம்மாவும் பூரித்துப்போவார்கள்.உன்னைப் பெற்றெடுத்தவள் சந்தோஷப்படுவாள்.
26 என் மகனே, உன் இதயத்தை எனக்குத் தா.உன் கண்கள் என் வழிகளை ரசிக்கட்டும்.+
27 விபச்சாரி ஓர் ஆழமான படுகுழி.ஒழுக்கங்கெட்ட பெண் ஒரு குறுகலான கிணறு.+
28 திருடனைப் போல் அவள் பதுங்கியிருக்கிறாள்.+நிறைய ஆண்களைத் துரோகம் செய்ய வைக்கிறாள்.
29 யாருக்கு வேதனை? யாருக்குக் கவலை?
யாருக்குச் சண்டை சச்சரவுகள்? யாருக்குப் புலம்பல்கள்?
யாருக்குத் தேவையில்லாத காயங்கள்? யாருக்குச் சிவந்த* கண்கள்?
30 மதுவே கதி என்று கிடப்பவர்களுக்குத்தான்.+அதிக போதையேற்றும் மதுவை* நாடிப் போகிறவர்களுக்குத்தான்.
31 திராட்சமதுவின் சிவப்பு நிறத்தைப் பார்க்காதே.அது கிண்ணத்தில் பளபளக்கும், தொண்டையில் இதமாக இறங்கும்.
32 கடைசியில், பாம்புபோல் கடிக்கும்.விரியன் பாம்புபோல் விஷத்தைக் கக்கும்.
33 உன் கண்கள் வினோதமான காட்சிகளைப் பார்க்கும்.உன் இதயம் தாறுமாறாகப் பேசும்.+
34 நடுக்கடலில் படுத்திருப்பவனைப் போலவும்,பாய்மரக் கம்பத்தின் உச்சியில் படுத்திருப்பவனைப் போலவும் நீ இருப்பாய்.
35 “என்னை அடித்தார்கள், ஆனால் எனக்கு உறைக்கவில்லை.
என்னை உதைத்தார்கள், ஆனால் நான் உணரவில்லை.
நான் எப்போது எழுந்திருப்பேன்?+
நான் மறுபடியும் குடிக்க வேண்டும்!” என்று நீ சொல்வாய்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “உன் தொண்டையில் கத்தியை வை.”
^ அல்லது, “உன் சொந்த புத்தியை நம்பாதே.”
^ வே.வா., “மீட்கிறவர்.”
^ நே.மொ., “சிறுநீரகம்.”
^ வே.வா., “சம்பாதி.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதலையும்.”
^ வே.வா., “மங்கிப்போன.”
^ வே.வா., “கலப்புத் திராட்சமதுவை.”